Latestமலேசியா

பிரதமர் அலுவலகத்துடன் கோவில் நிலப் பிரச்னை குறித்து மலேசிய இந்து கோவில் தேசிய வழிகாட்டிக் குழுவான NHTSC சந்திப்பு

புத்ராஜெயா, மார்ச்-13-மலேசியா இந்து கோவில் தேசிய வழிகாட்டிக் குழுவான NHTSC, நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் அலுவலகத்துடன் சந்திப்பு நடத்தி, கோவில் நிலம் தொடர்பான நீண்டகால பிரச்னைகளை முன்வைத்தது.

பிரதமருக்கு எழுத்துப்பூர்வமாக பல பரிந்துரைகளையும் அது வழங்கியது.

பதிவுச் செய்யப்படாத கோவில்களுக்கு “Kuil Tanpa Pendaftaran Tanah” என்ற புதிய நிர்வாகச் சொல்லை ஏற்றுக்கொள்வது, குறைந்தது 6 மாதங்களுக்கு அமுலாக்க நடவடிக்கைகளை நிறுத்தும் moratorium உத்தரவு மற்றும் இந்த வழிகாட்டிக் குழுவை தேசிய ஒருங்கிணைப்புக் குழுவாக அங்கீகரிப்பது உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

பிரதமர் அரசியல் செயலாளர் Chan Ming Kai, இந்த கவலைகளை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும், முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நீண்டகால தீர்வுக்காக ஆய்வு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த நேர்மையான கடப்பாட்டை வரவேற்றக் அக்குழு, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் கோவில் நிலப் பிரச்னைகள் சுமூகமாகத் தீர்க்கப்படலாம் என வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!