
கோலாலாம்பூர், அக்டோபர்-10,
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு, சன்வே லேகூன் மற்றும் சன்வே லோஸ்ட் வோர்ல்ட் ஆஃப் தம்புன் ஆகியவை பிரகாசமாக ஜொலிக்கின்றன.
“பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்” என்ற பெயரில் இப்பெருவிழா வரும் அக்டோபர் 15 முதல் 22 வரை நடைபெறுகிறது.
மலேசியாவின் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் பாரம்பரியத்திற்கு ஏற்ப, சன்வே கேளிக்கைப் பூங்கா — ஒளியின் திருவிழாவை வண்ணங்களுடன், இசையுடன், குடும்ப மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் இவ்வாண்டு மீண்டும் அனைவரையும் ஒரே குதூகலத்தில் இணைக்கிறது
விருந்தினர்கள் வண்ணமயமான கோல அலங்காரங்கள், இந்திய பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், மற்றும் புகைப்பட மையங்கள் என தீபாவளியின் உற்சாகத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.
குழந்தைகளும் குடும்பங்களும் சன்வே லேகூன் Surf Beach மற்றும் தம்புனில் Petting Zoo-வில் நேரத்தை செலவிடுவதோடு, அவ்விரு கேளிக்கை மையங்களையும் சுற்றியுள்ள புகைப்படமெடுக்கும் பகுதிகளிலும் ஏராளமான புகைப்படங்களை எடுக்கலாம்.
முக்கிய நிகழ்வாக, அக்டோபர் 20-ஆம் தேதி இரவு வானத்தை ஒளிரச் செய்யும் அற்புதமான வானவேடிக்கை நிகழ்ச்சியும் இரு பூங்காவிலும் நடைபெறுகிறது!
ஒளி, கலாச்சாரம் மற்றும் ஒன்றுபட்ட மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் இந்த பெருவிழா வருடாந்திர நுழைவு அட்டைதார உறுப்பினர்களுக்கு இலவசமாகும்.
மேலும் தகவல்களுக்கு: sunwaylagoon.com மற்றும் sunwaylostworldoftambun.com. இணைய அகப்பக்கங்களை வலம் வரலாம்.