Latest
பிரான்சில் நீச்சல் குளம் தோண்டுகையில்,RM3.6 மில்லியன் மதிப்பிலான தங்க நாணயங்கள் & தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு

பிரான்ஸ், நவம்பர் 7 – பிரான்சில் ஒரு நபர் தனது வீட்டுத் தோட்டத்தில் நீச்சல் குளம் தோண்டியபோது, சுமார் 3.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளை கண்டுபிடித்துள்ளார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் கண்டுபிடித்த அந்நாணயங்களைப் பற்றிய விவரத்தை, அந்த நபர் உடனடியாக கலாச்சார துறையிடம் (Department of Cultural Affairs) அறிவித்துள்ளார்.
இது தொல்பொருள் சம்பந்தப்பட்ட பொருளாக இல்லை என்பதால், அந்நாணயங்களை அந்நபரே வைத்திருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தங்க நாணயங்கள் அங்கே எவ்வாறு வந்ததென தெளிவாக கண்டறிய முடியாத நிலையில், அந்த நிலத்தின் முந்தைய உரிமையாளர் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



