
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4- கோலாலம்பூர் Taman Kuchai Enterpreneur சிலுள்ள அடுக்ககத்தில் 1.48 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
ஜூலை 29 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின்போது நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ உசேய்ன் ஒமார் உமர் கான்( Hussein omar Khan ) தெரிவித்தார். அவர்களில் உள்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவரும் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் ஓர் ஆடவரும் அடங்குவர்.
அந்த அடுக்ககத்தின் விருந்தினர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் சாக்லேட் நிறத்திலான 91 பொட்டலங்களில் 1.84 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 42.3 கிலோகிரேம் எடையுள்ள சந்தேகிக்கப்பட்ட கஞ்சா பூக்கள் இருந்ததாக இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Hussein கூறினார்.
உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னதாக அடுக்ககத்தில் கஞ்சாவை இந்த கும்பல் சேமித்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக 1952ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 பி விதியின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவர்கள் அனைவரும் ஆகஸ்டு 5 ஆம் தேதிவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின், 1988 ஆம் ஆண்டின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் 1988ஆம் ஆண்டின் விதியின் கீழ் இரண்டு கார்கள், மூன்று ஆடம்பர கைக் கடிகாரங்கள், நகைகள், கை தொலைபேசிகள் உட்பட 93,350 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் தெரிவித்தார்.