
ஷா ஆலாம்- அக்டோபர்- 15,
ஜாலான் புக்கிட் கெமுனிங் , எட்டாவது மைலில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட முதியோருக்கு தீபாவளி புத்தாடைகள், அன்பளிப்பு வழங்கப்பட்டு , இரவு உணவுகளுடன் அவர்கள் உபசரிக்கப்பட்டனர். கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரின் பிரகாஷ் சம்புநாதன் முயற்சியோடு நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்கள் மட்டும் இன்றி புக்கிட் கெமுனிங் சுற்று வட்டார பகுதியிலுள்ள முதியோரும் இவ்விருந்து உபசரிப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைத்து முதியோருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ச.பிரகாஷ் தனது கையால் புத்தாடைகளையும் பணமுடிப்பையும் வழங்கினார். புக்கிட் கெமுனிங் இந்திய கிராமத்து தலைவர் நடராஜா , ஷா அலாம் மாநகர் மன்ற உறுப்பினர் ச.யோகேஸ்வரி, அலாம் மேகா கிரமத்து தலைவர் எம்.கோபி ஆகியோருடன் இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.