
கியெவ், டிசம்பர்-30 – அதிபர் விளாடிமிர் புட்டின் வசிக்கும் இல்லத்தை குறிவைத்து யுக்ரேய்ன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள புட்டினின் அரசு இல்லத்தின் மீது 91 தொலைதூர ட்ரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேய்ன் இரவோடு இரவாக தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா வெளியுறவு அமைச்சர் கூறினார்.
எனினும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் புட்டின் எங்கிருந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தைகளில் தனது நிலைப்பாட்டை ரஷ்யா மறுபரிசீலனை செய்யலாமென மோஸ்கோவ் கோடிகாட்டியுள்ளது.
ஆனால், யுக்ரேய்னோ அதனை முற்றிலும் மறுத்துள்ளது.
மாறாக, இது ரஷ்யாவின் வழக்கமான ‘வடிகட்டிய’ பொய்ப் பிரச்சாரம் என யுக்ரேய்ன் அதிபர் வொளோடிமிர்
செலன்ஸ்கி (Volodymyr Zelensky) தெரிவித்தார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் 2026-க்குள் போரை முடிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் அமெரிக்காவின் ஆதரவு அவசியம் என செலன்ஸ்கி வலியுறுத்தினார்.
ரஷ்யாவின் இக்குற்றச்சாட்டு, அமைதி பேச்சுவார்த்தையின் நம்பகத்தன்மையை
சோதனைக்கு உட்படுத்தும் வகையில்
உலக கவனத்தை ஈர்த்துள்ளது.



