Latestமலேசியா

புறப்பட்டது Artemis II: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பங்கேற்கும் முதல் சந்திரப் பயணம்

லோஸ் ஏஞ்சலஸ், ஏப்ரல்-2-அமெரிக்க விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயமாக,
NASA-வின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளிப் பயணம், ஃப்ளோரிடா மாநிலம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக புறப்பட்டுள்ளது.

10 நாள் சந்திர சுற்றுப்பயணமாக இந்த ஓரியோன் விண்கலத்தை ஏற்றிய SLS ராட்சத ராக்கெட் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.35 மணிக்கு விண்ணில் பாய்ச்சப்பட்டது.

இது, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பங்கேற்கும் சந்திரப் பயணமாகும்.

4 விண்வெளி வீரர்கள் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவர்களில், நிலாவுக்கான பயணத்தில் பங்கேற்கும் முதல் கருப்பின வம்சாவளியான Victor Glover, முதல் பெண்ணான Christina Koch, முதல் வெளிநாட்டு விண்வெளி வீரரான கனடாவின் Jeremy Hansen ஆகிய மூவரும் அடங்குவர்.

இக்குழுவுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த கொமாண்டர் Ried Wiseman தலைமையேற்றுள்ளார்.

ஓரியோன் விண்கலத்தின் இயக்கம் மற்றும் பாதுகாப்பை பரிசோதனை செய்வது, எதிர்கால சந்திர தரையிறக்கம் அதாவது 2028-ல் Artemis III விண்கலத்தைத் தரையிறக்க அடித்தளம் அமைப்பது, செவ்வாய் கிரக பயணத்திற்கான வாய்ப்பை ஆராய்வது ஆகியவை இப்பயணத்தின் நோக்கமாகும்.

Artemis II புறப்பட்டதன் மூலம், மனிதகுலம் மீண்டும் சந்திரனை நோக்கி முன்னேறுகிறது…

…அடுத்த இலக்கு கண்டிப்பாக செவ்வாய் கிரகம் தான் என்பதும் தெளிவாகியுள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!