புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, தடுப்பூசியை உருவாக்கி ரஷ்யா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கடைசிக் கட்ட சோதனை நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டுத் தொடக்கத்தில் அது அறிமுகப்படுத்தப்படும்.
இன்னும் பெயர் அறிவிக்கப்படாத mRNA வகை அத்தடுப்பூசிகள், புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
ஆனால், பொதுமக்களுக்கு நோய்த் தடுப்புக்காக வழங்கப்படாது என, ரஷ்ய சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் கூறியது.
Pre-clinical trials எனப்படும் முன் மருத்துவ பரிசோதனைகளில், அத்தடுப்பூசி புற்றுநோய்க் கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது ஏற்கனவே உறுதிச் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பெரும் ஆட்கொல்லி நோயாக இருக்கும் இந்த புற்றுநோய், ரஷ்யாவிலும் அதிகளவில் பதிவாகி வருகிறது.
அங்கு 2022-ஆம் ஆண்டில் மட்டும் 635,000 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின.
குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகியவையே அவற்றில் முன்னணி வகிக்கின்றன.
இந்நிலையில், புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்குவதில் ரஷ்யா இறுதிக் கட்டத்திலிருப்பதாக, அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimnir Putin) இவ்வாண்டு தொடக்கத்திலேயே அறிவித்திருத்திருந்தார்.
இப்போது வருடம் முடிவதற்குள், புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
தடுப்பூசி அடுத்தாண்டு அறிமுகமானதும், புற்றுநோய்க்கான உலகின் முதல் தடுப்பூசியாக அது விளங்கும்.