
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-18-பெட்டாலிங் ஜெயாவில் ரோத்தானால் அடித்தும் நாற்காலிகளைத் தூக்கி வீசியும் குழந்தைகளைத் தாக்கியதாக கூறப்படும் 38 வயது ஆடவர் கைதாகியுள்ளார்.
அவர் கொடூரமாகக் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், அவ்வாடவர் 8 முதல் 11 வயதிலான சில குழந்தைகளை அடிப்பதும், அவர்கள் மீது நாற்காலி எறிவதும் தெரிகிறது.
பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து, போலீஸில் புகார் அளித்ததை அடுத்து அந்நபர் கைதானார்.
விசாரணையில், அவர் அக்குழந்தைகளின் மாமா என்றும், பாட்டியின் சொல் பேச்சைக் கேட்காததாலேயே ஆத்திரத்தில் குழந்தைகளை அவர் அடித்ததும் தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.
மேல் விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



