
கோலாலாம்பூர், மார்ச்-17 – ம.இ.கா அதிகாரப்பூர்வமாக பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இணைவதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கிடின் ஹசான் உறுதிப்படுத்தியுள்ளார்.
உறுப்புக் கட்சியாக சேர ம.இ.கா செய்திருந்த விண்ணப்பம் கடந்த டிசம்பரிலேயே ஏற்கப்பட்டு விட்டது; கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்திலும் அது உறுதிச் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றிரவு ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனை தாம் நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கவிருப்பதாக தாக்கியுடின் தெரிவித்தார்.
ம.இ.காவுக்கு PN தலைமைத்துவத்தில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கோடி காட்டினார்.
ஏற்கனவே, பாஸ், பெர்சாத்து, கெராக்கான், MIPP ஆகியவை இருக்கும் நிலையில், ம.இ.காவின் வரவோடு, பெரிக்காத்தான் உறுப்புக் கட்சிகளின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக அதிகரித்துள்ளதாக தாக்கியுடின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தாக்கியுடின் இவ்வாறு தகவலை கூறியிருந்தாளும் மஇகா தரப்பிலருந்து எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இதுகுறித்து தகவல் கேட்க வணக்கம் மலேசியா மஇகா தலைமைத்துவத்தை தொடர்புக்கொண்டு வருகிறது.



