
பெரோடுவா தேசிய அமெச்சூர் கோல்ஃப் தொடர் 2026 அதிகாரப்பூர்வ அறிமுகம்
ரவாங், பிப்ரவரி-14,
மலேசிய விளையாட்டு சுற்றுலா துறைக்கு புதிய ஊக்கமாக, 6-ஆவது பெரோடுவா தேசிய அமெச்சூர் கோல்ஃப் தொடர் (PNAGS) 2026 அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.
டெம்ப்ளர் பார்க் கன்ட்ரி & கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வை Tourism Malaysia துணைத் தலைமை இயக்குநர் லீ தாய் ஹங் (Lee Thai Hung) திறந்து வைத்தார்.
இந்த PNAGS தொடர் மலேசியாவின் கோல்ஃப் சமூகத்தை உயர்த்துவதோடு, உலகத் தரமான விளையாட்டு நிகழ்வுகளின் மையமாக நாட்டின் அந்தஸ்தை வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
PNAGS 2026 தொடர் 14 மாநிலங்களில் நடைபெற்று, தேசிய அளவிலான இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.
இதன் மூலம், உலக அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் (WAGC) உலக இறுதிச் சுற்று 2026-க்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த உலக இறுதிப் போட்டி, ஜோகூர் டெசாரு கோஸ்டில் (Desaru Coast) அக்டோபர் 23 முதல் 31 வரை நடைபெறும்.
அதில் 45 நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பர்; இதன் மூலம் உலகளவில் பிரசித்திப் பெற்ற அமெச்சூர் கோல்ஃப் போட்டிகளில் ஒன்றாக இது திகழவுள்ளது.
PNAGS மலேசியாவின் சுற்றுலா பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறது… குறிப்பாக ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக லீ கூறினார்.
இவ்வேளையில் முதன்மை ஆதரவாளரான பெரோடுவா, அடிமட்ட விளையாட்டு வளர்ச்சிக்கும், தேசிய விளையாட்டு வளர்ச்சிக்குமான தனது கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியது.



