Latest

பெர்மிட் இல்லை; RM240,000 மதிப்புள்ள 4 முதலைக் குட்டிகள் பறிமுதல், ஆடவர் கைது

ஜோகூர் பாரு, ஜனவரி-4,

ஜோகூர் பாருவில் பெர்மிட் அனுமதி இல்லாமல் 4 tembaga வகை முதலைக் குட்டிகளை வைத்திருந்த ஆடவர் கைதுச் செய்யப்பட்டார்.

RM240,000 மதிப்புள்ள அக்குட்டிகளை polystyrene பெட்டியில் வைத்து காரின் பூட் பகுதியில் அவ்வாடவர் மறைத்து வைத்திருந்தார்.

சந்தேக அடிப்படையில் பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில், புக்கிட் அமான் சேமப்படை, PERHILITAN வனவிலங்குத் துறையின் ஜோகூர் கிளை ஆகியவை ஒருங்கிணைந்து மேற்கொண்ட சோதனையில் அந்நபர் சிக்கினார்.

PERHILITAN விசாரணை அறிக்கையை முழுமைச் செய்யும் வரையில் போலீஸ் ஜாமீனில் அவ்வாடவர் விடுவிக்கப்பட்டார்.

Tembaga முதலைகள், 2010 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாக பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.

அனுமதி இல்லாமல் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு அபராதம், சிறைத் தண்டனை இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!