
பிரசெல்ஸ், ஏப்ரல் 22 – நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் தலைமையிலான அஜித் குமார் ரேஸிங் அணி, பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றி செய்தி, அஜித் குமார் ரசிர்கர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்பு, துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன் அஜித் குமார் கார் ரேஸில் பங்கேற்றபோது வெற்றி பெறுவது கடினமாக இருந்ததாகவும் ஆனால் தொடர் விடாமுயற்சி காரணமாக அவர் இந்தச் சாதனைகளைச் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்