
கோலாலம்பூர், பிப்ரவரி-18-கோலாலம்பூரில் உள்ள பேரங்காடியொன்றில் காட்சிப் பொருளாக, ஒட்டக இனத்தைச் சேர்ந்த விலங்கினமான அல்பாக்கா (Alpaca) சிறிய கூண்டில் அடைக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான வீடியோக்களில், அந்த விலங்கு மிகவும் குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டு, சத்தமுள்ள கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது தெரிகிறது.
பலர், அது வாரக்கணக்கில்…ஏன் தினமும் பேரங்காடி மூடிய பிறகும் கூட அங்கே தனித்து விடப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
கூண்டில் அடைப்பட்டதாலும் நலன் புறக்கணிக்கப்பட்டதாலும் அந்த அல்பாக்கா பார்ப்பதற்கு சோர்வாகவும், பயந்த சுபாவத்தோடும் உள்ளது.
எனவே, விலங்கு நல ஆர்வலர்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கவும், கால்நடை சேவைத் துறைக்கு புகார் அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், ஏற்கனவே நடந்த ‘Alpaca Cafe’ சர்ச்சையை நினைவுப்படுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள இந்த கண்டனங்கள், பொழுதுபோக்கு இடங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கான பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.
அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவோம்.



