
ஈப்போ, செப் 8 – மேன்மை தங்கிய பேரா சுல்தான , Sultan Nazrin
Muizzudin Shah வுக்கு எதிராக குற்றவியல் வன்முறையில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆகஸ்டு 31 ஆம்தேதி காலை மணி 8.20 அளவில் Jalan Panglima Bukit Gantang Wahabகிலுள்ள ஈப்போ மாநகர் மன்ற கட்டிடத்திற்கு முன்புறம் இந்த குற்றத்தை புரிந்ததாக 41 வயதுடைய நுர்ஹஸ்வானி அப்னி முகமட் ஸோர்கி ( Nurhaswani Afni Mohamad Zorki) மீது இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 325 ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட காயம் விளைவிக்க முயன்றதாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் மூன்று மாதம் சிறை அல்லது கூடியபட்சம் 1,000 ரிங்கிட் அபராதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம் .
மாஜிஸ்திரேட் Mohd Harith Mohd Mazlan முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அமைதியாக காணப்பட்ட Nurhaswani அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையாட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை Bahagia Ulu Kinta மருத்துவமனையின் தொடக்கக் கட்ட அறிக்கை உறுதிப்படுத்தியதால், அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படாது என அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் DPP நஸ்ருல் ஹடி அப்துல் ( Nasrul Hadi Abdul ) தெரிவித்தார்.
எனவே அவரது மன நிலை விசாரணைக்கு தகுதியானதா என்பதை தீர்மானிக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 342 ஆவது பிரிவின் கீழ் மேலும் மனநல மதிப்பீடு அறிக்கையைப் பெற அரசு தரப்பு உத்தரவைக் கோருகிறது என்று அவர் கூறினார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி Mohd Harith, குற்றம் சாட்டப்பட்டவர் முழு அறிக்கையைப் பெறுவதற்கு முன் மேலும் மனநல பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.