
ஈப்போ, பிப்ரவரி 4 – பேராக் Pantai Remis அருகே உள்ள Changkat Keruing, Kampung Lubuk பாலம் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில், ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்ததாக, மஞ்ஜோங் மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Hasbullah Abd Rahman தெரிவித்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆற்றில் மிதந்தும் அழுகிய நிலையிலும் இருந்த அந்தச் சடலம், டி-ஷர்ட் மட்டுமே அணிந்த நிலையில் இருந்ததெனவும் உடலில் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், முட்டையான பொருளால் தலையில் ஏற்பட்ட காயமே உயிரிழப்பிற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



