Latestமலேசியா

பேராக்கில் 2.36 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் போன ‘ANU’ வாகன எண் பட்டை

ஈப்போ, ஜனவரி-1, பேராக்கில் ANU (ஆனு) என்ற உச்சரிப்பைக் கொண்ட வாகனப் பதிவு எண் பட்டை, 2.36 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

டிசம்பர் 19 முதல் 23 வரை நடைபெற்ற ஏலத்தில் ஆக அதிகமாக ANU 1 என்ற எண் பட்டை 269,000 ரிங்கிட்டுக்கு விலை போனது.

1,768 பேர் ஏலத்தில் பங்கேற்கும் அளவுக்கு அந்த ANU எண் பட்டை வரிசைக்கு வரவேற்பு இருந்ததாக, பேராக் JPJ இயக்குநர் Mohammad Yusoff Abustan தெரிவித்தார்.

என்றாலும், பேராக்கில் 6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் குவித்து AMG எண் பட்டை வைத்துள்ள சாதனையை ANU-வால் நெருங்க முடியவில்லை என்றார் அவர்.

ANU என்பது மலாய் பேச்சு வழக்கில் மற்றவரைக் குறிக்கும் சொல்லாகும்.

அதே சமயம் மர்ம உறுப்பை குறிக்கும் வகையிலும் பலரால் அது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முன் பேராக்கில் AKU என்ற வாகனப் பதிவு எண் பட்டையே படு பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!