ஈப்போ, நவம்பர்-16 – பேராக், ஸ்ரீ இஸ்கண்டாரில் போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டதன் பேரில் 2 பெண்கள் உட்பட 4 உயர் கல்விக் கூட மாணவர்கள் கைதாகியுள்ளனர்.
பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்
20 முதல் 22 வயதிலான அந்நால்வரும் terrace வீட்டொன்றில் நேற்று பிற்பகல் கைதுச் செய்யப்பட்டனர்.
அவ்வீட்டிலிருந்து 2,500 ரிங்கிட் மதிப்பில் 2 கிலோ கிராம் எடையிலான கஞ்சா வகைப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சொந்த உபயோகத்துக்கும் வெளியில் விநியோகிப்பதற்காகவும் அது வைக்கப்பட்டிருந்ததாக பேராக் போலீஸ் கூறியது.
400 ரிங்கிட் ரொக்கம், Mercedes Benz C200 கார், ஒரு சங்கிலி ஆகியவையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மூவர் நவம்பர் 19 வரையிலும், இன்னொருவர் நவம்பர் 20 வரையிலும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.