
ஜோகூர் பாரு, அக்டோபர் 2: பொந்தியான் மாவட்டத்தில் கடந்த மாதம் தனது எட்டு வயது அக்காவின் மகளை சூடான ‘iron’ பெட்டியால் சுட்டு காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
21 வயதான குற்றவாளி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பெனுட், கம்போங் பாரிட் ஜமால் (Kampung Parit Jamal, Benut) பகுதியில் உள்ள வீட்டில் தனது பராமரிப்பில் இருந்த சிறுமியை துன்புறுதியுள்ளான்.
குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த இக்குற்றத்திற்கு அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதமும், 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கிப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் அவ்வாடவனுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகை விதித்தது.
மருத்துவ அறிக்கையையும் தண்டனையையும் தீர்மானிப்பதற்கு இந்த வழக்கு நவம்பர் 6ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் பள்ளி ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமி வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் போது சத்தம் போட்டதால் அவரது மாமா சூடு வைத்தார் என்று பொந்தியான்
போலீஸ் தலைமை அதிகாரி முகமட் ஷோஃபி தயிப் (Mohammad Shofee Tayib) தெரிவித்தார்.