
ஜோகூர் பாரு, டிச 26 – பொழுதுபோக்கு மையத்தில் மது அருந்திய அரசு ஊழியர்களில் மூவர் உட்பட 18 தனிப்பட்ட இஸ்லாமிய நபர்கள் ஜோகூர் சமயத்துறை அமலாக்கத்துறையினரால் ஜோகூர் பாரு மாநகரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
இரவு மணி 11.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கையில் நான்கு வெளிநாட்டுப் பெண்களும் கைது பிடிபட்டனர்.
1997 ஆம் ஆண்டின் ஜோகூர் ஷரியா சட்டத்தின் 19 ஆவது விதியின் கீழ் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 3,000 ரிங்கிட்வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கைதானவர்களில் 11 ஆண்களும் 7 பெண்களும் அடங்குவர் . அவர்களில் 14 பேர் உள்நாட்டினர் என்பதோடு நான்கு பெண்கள் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் என இன்று வெளியிட்ட அறிக்கையில் ஜோகூர் மாநில இஸ்லாமிய சமயத்துறை தெரிவித்தது.



