
சிங்கப்பூர், பிப்ரவரி-22 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மற்றொரு மலேசியர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பவிருக்கிறார்.
60 வயதிலான Hamzah Ibrahim-முக்கு பிப்ரவரி 26-ல் மரண தண்டனை நிறைவேற்றம் உறுதியாகியிருப்பதாக, அவரின் முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி தெரிவித்தார்.
26.29 கிராம் diamorphine போதைப்பொருள் கடத்தியத்தற்காக 2017-ல் சிங்கப்பூர் உயர் நீதிமன்றும் Hamzah-வுக்கு மரண தண்டனை விதித்தது.
கைதானப் பிறகு,
போதைப்பொருள் கடத்தலைத் துடைத்தொழிப்பதில் சிங்கப்பூர் போலீஸுக்கு தகவல்களைக் கொடுத்துதவியற்காக, அவருக்கு CSA சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் போதைப்பொருள் அனுப்புநராகக் கருதப்படாததால், மாற்று தண்டையான ஆயுள் தண்டனைக்குத் தகுதி பெறவில்லை.
எனவே நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையை வழங்கியது.
எனவே, வரும் புதன்கிழமை Hamzah தூக்கிலிடப்படுவதைத் தடுக்க, உள்ளுர் மற்றும் அனைத்துலக அமைப்புகள் இணைந்து போராட முன் வர வேண்டுமென ரவி கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, அதே குற்றத்திற்காக பன்னீர் செல்வம் பரந்தாமன் எனும் மலேசியரின் மரண தண்டனை புதன்கிழமை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் வெளியூரைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் பன்னீருக்குக் குரல் கொடுத்து வந்த நிலையில், மரண தண்டனைக்கு ஒரு நாளுக்கு முன்பதாக சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரின் தூக்குத் தண்டனையை தற்காலிகமாக ஒத்தி வைத்தது.