போர்ட்டிக்சன் ஹோட்டலுக்கு அருகே ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுப்பிடிப்பு

போர்ட் டிக்சன் , நவ 12 – போர்ட் டிக்சன் 4ஆவது மைல் கடற்கரையிலுள்ள ஹோட்டலுக்கு அருகே முழு உடையுடன் இறந்த நிலயில் காணப்பட்ட ஆடவரின் உடல் மிதந்த நிலையில் வெள்ளிக்கிழமை கண்டுப் பிடிக்கப்பட்டது. இரவு மணி 7.55 அளவில் இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதாக போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் யுடின் தெரிவித்தார்.
64 கிலோ எடையுடன் 164 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அந்த ஆடவர் ஒட்டுப் பற்களை அணிந்திருந்தார். கருப்பு நிற டீ சட்டை , பச்சை நிற அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த அந்த ஆடவரின் உடலில் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரது உடலில் காயங்கள் மற்றும் குற்றவியல் நடந்ததற்காக அறிகுறியும் காணப்படவில்லை. அவரது இறப்பை திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். உடற்கூறு பரிசோதனைக்காக அந்த சடலம் போர்ட் டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



