Latestமலேசியா

போலீஸ் சோதனையில் தப்பியோடிய ஆடவன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து மரணம்

கோலாலம்பூர், மார்ச் 12 – கோலாலம்பூர் ஜாலான் கோம்பாக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்றிரவு போலீசார் நடத்திய சோதனையின் போது தப்பியோட முயன்ற ஆடவன் , ஒரு ​​கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தான். மோட்டார் சைக்கிள் திருட்டு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக போலீசார் சோதனை நடத்தியபோது இரவு மணி 9.07 அளவில் இச்சம்பவம் நடந்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) கூறினார்.

இந்த சோதனையின் போது, ​​இரண்டு சந்தேக நபர்கள் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது 52 வயதான உள்நாட்டு நபர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்துவிட்டதோடு , மற்றவர் உயிர் பிழைத்ததாக உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாக பாடில் வெளியிட்ட அறிக்கையில்
குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!