
அலோர் ஸ்டார், ஜனவரி-1 – கெடா, அலோர் ஸ்டாரில், போலீஸ் அதிகாரிகளை நோக்கி எச்சில் துப்பியதோடு, தகாத வார்த்தைகளால் திட்டி, ஆபாச சைகையும் புரிந்ததாகக் கூறி, 34 வயது உள்ளூர் பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
Mergong-கில் பொது இடத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, அப்பெண் இரகளையில் ஈடுபட்டார்.
முதலில் போலீஸிடம் கத்திப் பேசியவர், பின்னர் அவமரியாதையான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில், அவர் ஒரு போலீஸ் அதிகாரியைத் துப்பியதுடன், தனது அடையாள அட்டையையும் அவர்மீது எறிந்ததாக போலீஸார் கூறினர்.
இஸ்லாத்தை அவமதிக்கும் வார்த்தையையும் அவர் வெளியிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பெண்ணுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசு ஊழியர்களின் பணியைத் தடுக்கும் வகையில் நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.



