
கோலாலம்பூர், டிச 16-ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் இன்று ம.இ.கா தலைமையகத்தில் தனது 60ஆவது பிறந்த நாளை அணிச்சல் வெட்டி கட்சி உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் ம.இ.காவின் உதவித் தலைவர்களான டத்தோ அசோஜன், டத்தோ டி.முருகையா, டத்தோ நெல்சன், டான்ஸ்ரீ ராமசாமி , தலைமைச் செயலாளர் டத்தோ ஆனந்தன், பொருளாளர் டத்தோ சிவக்குமார் ஆகியோரும் மாலை அணிவித்து விக்னேஸ்வரனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அரசாங்கத்தில் எந்தவொரு பதவியில் இல்லாவிட்டாலும் ம.இ.காவை கட்டுக்கோப்பாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வழிநடத்திச் செல்வது பாராட்டுக்குறியது என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவாணன் தெரிவித்தார்.
கடந்த ஏழு ஆண்டு காலமாக ம.இ.காவுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் விக்னேஸ்வரன் அனைத்து நிலைகளிலும் கட்சி தலைவர்களிடையே நல்லதொரு புரிந்துணர்வையும் நட்புறவையும் கொண்டிருப்பதை இன்று நாடு தழுவிய நிலையில் ம.இ.கா தலைமையத்திற்கு வந்துள்ள தலைவர்களே சிறந்த உதாரணம் என சரவணன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்திய சமூதாயத்தை ஒரு குடையின் கீழ் இணைப்பதே ம.இ.காவின் அடுத்த இலக்கு என்றும் இதுவே தனது பிறந்தநாள் கோரிக்கை என தனது ஏற்புரையில் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார் .
இதனிடையே கட்சியின் தலைமைத்துவம் முதல் அடிமட்ட உறுப்பினர்கள்வரை ம.இ.கா வலுவடைந்திருப்பதோடு ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம் , Tafe கல்லூரி உட்பட அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு டத்தோஸ்ரீ சரவணன் அழைப்பின் பேரில் கவிப் பேரரசு வைரமுத்துவும் நேரில் வருகை புரிந்து விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக் கூறி சிறப்பு செய்தார்.
மத்திய செயலவை உறுப்பினர்கள், மாநில ம.இ.கா தலைவர்கள், தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் உட்பட 1,000த்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



