
மலாக்கா, ஜனவரி 8 – மலாக்கா ராயா 7 பகுதியில் உள்ள ஒரு ‘Night Club’ முன்பு, இன்று அதிகாலை 4 மணியளவில் ஆடவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 20 வயதிற்குட்பட்ட இரண்டு பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சம்பவத்தின்போது துப்பாக்கி பயன்பாடு இருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும் மலாக்கா தெங்கா மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் ஆரம்ப விசாரணையில், புகாராளர்களின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக மலாக்கா மாவட்ட காவல் துறை தலைவர் Asisten Komisioner Christopher Patit தெரிவித்தார்.
தற்போதைக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட ஆய்வின்படி அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



