
மலாக்கா, மார்ச் 25 -இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மலாக்கா தெங்கா மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் வாகனத் திருட்டுகள், வீடுகளை உடைத்து திருடுவது மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹர்ராஸ் ( Harras) கும்பல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
மார்ச் 19 ஆம் தேதி Permatang Pasir ரில் குற்றப்புலனாய்வுத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் நால்வர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கிறிஸ்டோபர் பதிட் ( Christoper Patit ) தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்த புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள்,
24 முதல் 32 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கண்டாங் ,( Kandang ) , பெம்பான், பன்டார் ஹிலிர் மற்றும் Tanjung Minyak பகுதிகளில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தக் குழு செயல்பட்டு வந்ததோடு , மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் திருட்டுகள், அத்துடன் வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட குறைந்தது 12 குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டது விசாரணயில் தெரியவந்துள்ளது.
தடயங்களை அழிப்பதற்காகவும், வருமான ஆதாரத்தை உருவாக்குவதற்காகவும், மாற்றியமைக்கப்பட்ட ‘மாஸ்டர் கீ’ அல்லது ‘டி-பார்’ கருவியைப் பயன்படுத்தி யமஹா 125ZR மற்றும் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து, பின்னர் வாகனத்தின் பாகங்களைப் பிரித்து மூன்றாம் தரப்பினருக்கு விற்பதே இவர்களின் குற்ற நடவடிக்கைகளாக இருந்ததாக மலாக்கா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.



