Latestமலேசியா

மலேசிய எண்ணெய் விநியோகத்திற்கு மே மாதம் வரை பிரதமர் உத்தரவாதம்

ஷா ஆலாம், மார்ச்-27-நாட்டின் எண்ணெய் விநியோகத்திற்கு வரும் மே மாதம் வரை பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேற்காசிய மோதலால் உலகச் சந்தையில் தாக்கம் இருந்தாலும், மலேசியாவின் நிலைமை அண்டை நாடுகளைப் போல சிக்கலானதல்ல என்றார் அவர்.

அவர்களை விட நாம் நல்ல நிலையில் இருப்பதற்கு நன்றிகூற வேண்டும்; அதை விடுத்து அலட்சியமாகவோ அல்லது அரசியல் ஆதாயமோ தேடக் கூடாது என அவர் சொன்னார்.

இந்நிலையில், நாட்டின் எண்ணெய் கையிருப்பு மீதான தாக்கத்தை அரசாங்கம் தினசரி கண்காணித்து வருகிறது.

இதுவரை கணிசமான விலை உயர்வோ அல்லது வீழ்ச்சியோ எதுவும் இல்லை என்றார் அவர்.

இதனிடையே, பெட்ரோனாஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை உள்ளிட்ட மலேசிய எண்ணெய்க் கப்பல்கள் Hormuz நீரிணையில் செல்ல அனுமதி அளித்ததற்கு, ஈரானிய அதிபர் Masoud Pezeshkian-னுக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.

பெட்ரோனாஸ், வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் பிரேசில், சுரினாம், கனடா போன்ற இடங்களிலும் முதலீடு செய்துள்ளது.

இதனால் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதியாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!