
கோலாலம்பூர், நவம்பர்-9,
மலேசியாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக உள்ள 4.4 மில்லியன் வாகனங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சாலைகளில் இயங்குகின்றன.
இந்த வாகனங்களில் airbags, ABS, ESC போன்ற முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இல்லை.
இதனால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சாலைப் போக்குவரத்து துறையான JPJ எச்சரித்துள்ளது.
வணிக பரிசோதனை கட்டுப்பாடுகள் இல்லாமல் சாலையில் இயங்கும் இந்த வாகனங்கள் பெரும்பாலும் தனியாருடையதாகும்.
எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க, வாகன உரிமையாளர்கள் அவற்றின் பாதுகாப்பு குறைபாடுகளை உணர வேண்டும்; ஒன்று வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் அல்லது அவற்றை இனியும் சாலையில் பயன்படுத்தக் கூடாது என JPJ அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம் அதிகாரிகள் தரப்பிலும், கடுமையான கொள்கை மாற்றங்கள், புதிய விழிப்புணர்வு முயற்சிகள், மற்றும் பழைய வாகனங்களை மாற்ற ஊக்கத்திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக JPJ கூறிற்று.



