Latestமலேசியா

மலேசியாவின் முதல் மலேசிய ஊடக மன்ற மசோதாவை நிறைவேற்றியது நாடாளுமன்றம்

கோலாலம்பூர், பிப் 26 – உள்நாட்டு ஊடகத் துறையில் சுய தணிக்கையை அனுமதிக்கும் 2024ஆம் ஆண்டின் மலேசிய ஊடக மன்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வரலாற்றுப்பூர்வ மசோதா இன்று தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அவர்களால் மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் கீழ், இம்மன்றம் தரங்களை நிர்ணயித்து, ஊடகவியலாளர்களுக்கு நெறிமுறை மற்றும் பொறுப்பான தரங்களுடன் கொண்ட நடைமுறையை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் மொத்தம் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மசோதா முதல் வாசிப்புக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ​​

50 ஆண்டுகளுக்கு முன் 1973ஆம் ஆண்டு இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஊடக மன்றத்தை முன்மொழிந்ததாக
மசோதாவை சமர்ப்பித்தபோது தியோ நீ சிங் கூறியிருந்தார்.

மலேசிய ஊடக மன்றத்தை அமைப்பதற்கான மகஜர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஊடகக் குழுவை அமைப்பதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு, 21 பேர் கொண்ட அமைப்புக் குழுவால் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மசோதாவின் வரைவு முடிக்கப்பட்டது.

அமைப்புக் குழு ஊடகத் துறையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் 26 முறை கூட்டங்களை நடத்தியுள்ளது.

இதனிடையே, மலேசிய ஊடக மன்ற மசோதா அரசாங்கத்திற்கும் ஊடகத்துறை பிரதிநிதிகளுக்கும் இடையிலான முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பால் உருவானது என்று கூறிய தியோ , அமைப்புக் குழுவில் தற்போது ஊடகத் துறையைச் சேர்ந்த 40 பிரதிநிதிகள் இடம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

இம்மசோதா நிறைவேற்றத்தை வெகுவாக வரவேற்ற தொடர்பு துறை அமைச்சர் Fahmi Fadzil அடுத்து இந்த மசோதா மேலைவக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மாமன்னரின் ஒப்புதலோடு நடைமுறைக்கு வரும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!