
சுங்கை பட்டாணி, ஜூன்-7 – கெடா, சுங்கை பட்டாணி, தாமான் செமாராக்கில் புக்கிட் H மலையேறும் போது கால் இடறி விழுந்த ஆடவருக்கு கை எலும்பு முறிந்தது.
இன்று காலை 9.30 மணிக்கு தகவல் கிடைத்து தீயணைப்பு – மீட்புக் குழுவினர் சம்பவ இடம் விரைந்தனர்.
29 Yeoh Chee Sam எனும் அந்த மலையேறி பின்னர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மலையடிவாரம் கொண்டு வரப்பட்டார்.
பினாங்கைச் சேர்ந்த அந்நபர் மேல் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, குவாலா மூடா போலீஸ் கூறியது.