கோலாலம்பூர், செப்டம்பர் 19 –மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகமான MATRADE, நேற்று அனைத்துலக அளவில் வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கான International sourcing programme எனும் INSP நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுச் செய்திருந்தது.
அதில் நாட்டிலுள்ள 800 தொழில்முனைவர்களும், வெளிநாட்டிலிருந்து 280 வணிகர்களும் கலந்து கொண்டனர்.
சீனா, தைவான், சவுதி அரேபியா, தென் கொரியா, மெக்சிகோ, ஹோங் காங் உட்பட பல்வேறு உலகளாவிய தொழில்துறையினருடன், மலேசிய ஏற்றுமதியாளர்களையும் INSP நிகழ்ச்சியின் வாயிலாக இணைத்துள்ளதாக மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் Idzham Abdul Hamid தெரிவித்தார்.
இந்த புதுமையான தளத்தின் வாயிலாக, விவசாய பொருட்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுகள் போன்ற ஹலால் சான்றளிக்கப்பட்ட பரந்த அளவிலான மலேசியா தயாரிப்புகளை வாங்க பிற நாடுகளுக்குப் பெறும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
அவ்வகையில், அனைத்துலக வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் தங்களின் பொருட்களை உலக அளவில் விற்பதற்கு இந்த நேரடியாக நடந்த INSP நிகழ்ச்சியின் வாயிலாக நல்வாய்ப்பு அமைந்ததாக தொழில்முனைவர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு இணைந்து ஏற்பாடுச் செய்த MIHAS 2024-யின் அனைத்துலக ஹலால் கண்காட்சியில், மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகமான MATRADE, இந்த INSP நிகழ்ச்சியை ஏற்பாடுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.