Latestமலேசியா

மாமாவால் சுத்தியலால் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் அம்மார் தொடர்ந்து கவலைக்கிடம்

கோத்தா பாரு, செப்டம்பர்-27,

கிளந்தான், கோத்தா பாருவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், சொந்த மாமாவே சுத்தியலால் தாக்கியதில் கடுமையாக காயமடைந்த 7 வயது சிறுவன் Muhd Ammar இன்னமும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளான்.

தலையில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டதால் அவனுக்கு 50-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.

மூளையில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு தொடர்வதால் இன்னும் மருந்து மூலம் அவன் மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளான்.

மகன் சிறிய அளவில் தலையை அசைத்துக் காட்டியதாகவும், ஆனால் நிலைமை இன்னும் 50-50 என்றே இருப்பதாகவும் அம்மாரின் 31 வயது தந்தை Muhammad Badrul Remli கூறினார்.

குடும்பபே தற்போது பொது மக்களின் பிரார்த்தனைகளை நாடி, மகன் தெய்வாதீனமாக குணமடைய வேண்டும் என பிராத்திப்பதாக அவர் சொன்னார்.

சம்பவத்தில் தொடர்புடைய 46 வயது சந்தேக நபர், தாக்குதலுக்குப் பிறகு பந்தாய் மெலாவி கடற்கரைக்கு தப்பிச் சென்றான்.

பின்னர் அவன் அங்கு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் மற்றும் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!