
சென்னை, ஜூலை-22- காலை நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட இலேசான தலைசுற்றல் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய அவருக்கு சில பரிசோதனைகளை நடத்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனையிலிருந்தவாறே அவர் தனது பணிகளை மேற்கொள்வார் என்றும் அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வேளையில் 72 வயது தனது தந்தை நலமுடன் இருப்பதாக, ஸ்டாலின் மகனும் துணை முதல்வருமான உதயநிதி தெரிவித்தார்.
மக்களை நேரில் சந்திப்பற்காக தொடர்ச்சியாக roadshow நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் ஸ்டாலின் சற்று களைப்படைந்திருப்பதாக அவர் சொன்னார்.
ஸ்டாலின் திடீரென மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியதும், தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உதயநிதி உட்பட முக்கிய அமைச்சர்கள் மருத்துவமனை விரைந்த வேளை, ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் நடிகர் ரஜினிகாந்த் உடனடியாகத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.