Latestமலேசியா

முன்னாள் “ரேப்” இசைப் பாடகர் பலேந்திர ஷா நேப்பாளத்தின் புதியப் பிரதமராகிறார்

காட்மண்டு, மார்ச்-9-நேப்பாளத்தின் முன்னாள் rap  இசைப் பாடகர் பலேந்திர ஷா (Balendra Shah) அந்த தெற்காசிய நாட்டின் புதியப் பிரதமராகிறார்.

அவரின் கட்சி அண்மையப் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.

35 வயது பலேந்திர ஷா, முன்பு _Hiphop_ இசைக்கலைஞராக பிரபலமானவர்.

பின்னர் தீவிர அரசியலில் குதித்து தலைநகர் காட்மண்டுவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளைஞர்களிடம் பெரும் ஆதரவை பெற்ற அவர், ஊழல் எதிர்ப்பு மற்றும் மாற்றத்தை வாக்குறுதியாக அளித்து தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

அதன் பலனாக, பலேந்திர ஷா தனது தொகுதியில் முன்னாள் பிரதமர் K. P. Sharma Oli-யையே தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பரவலாக எதிர்பார்த்தபடியே அவரது கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ளதால், புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவு, அரசியல் நெருக்கடிக்குப் பிந்தைய நேப்பாள அரசியலில் ஒரு புதிய தலைமுறை எழுச்சியை காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் புதிய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நினைவூட்டப்பட்டுள்ளது.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!