
முப்பை , அக் 31 –
மும்பை விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பேக்கில் சோதனை நடத்திய இந்திய சுங்க அதிகாரிகள் இந்தோனேசிய காடுகளில் இருந்துவரும் Gibbons வகை இனத்தைச் சேர்ந்த சிறியவகை குரங்களை கைப்பற்றினர்.
மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக மும்பாய் வந்தடைந்த அந்த பயணியிடம் வனவிலங்கு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த விலங்குகளை இந்தியாவில் உள்ள தங்களது கும்பலின் உறுப்பினரிடம் சேர்க்கும்படி ஒப்படைத்ததாக கூறப்பட்டது.
அந்த குரங்குகளில் ஒன்று இறந்து கிடந்தது, மற்றொன்று, இந்திய சுங்க அதிகாரிகளால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு அதிகாரியின் கைகளில் தொட்டுக் கொண்டு, மெதுவாக கூச்சலிட்டு, பின்னர் அதன் கையால் முகத்தை மூடிக்கொண்டதை பார்க்க முடிந்தது.
உளவுத்துறையின் அடிப்படையில் செயல்பட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை மும்பையில் அந்த பயணியை கைது செய்தனர். அவரது சாமான்கள் இருந்த டிரோலி பேக்கை சோதனை செய்ததில், இரண்டு சில்வர் கிப்பன் குரங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அவை ஒரு கூடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தாய்லாந்து – இந்தியா விமான பயணச் சேவையில் கடத்தப்பட்ட 7,000த்திற்கும் மேற்பட்ட விலங்குகள் உயிருடன் மற்றும் மடிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.



