Latestமலேசியா

மூன்றாம் நிலைக் கல்வியை முடித்த 1.95 மில்லியன் பேர், குறைந்த திறன் கொண்ட வேலைகளில் உள்ளனர்

கோலாலம்பூர், நவம்பர்-8, நாட்டில் tertiary education எனப்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிலைக் கல்வியை முடித்த சுமார் 1.95 மில்லியன் தொழிலாளர்கள், குறைந்த திறன் கொண்ட வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டு வரைக்குமான நிலவரம் அதுவென, மலேசிய புள்ளி விவரத் துறை கூறியுள்ளது.

முந்தையக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 100,000 பேர் அதிகமாகும்.

இந்த 1.95 மில்லியன் பேரானது, ஒட்டுமொத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிலைக் கல்வியை முடித்தவர்களில் 36.8 விழுக்காட்டை பிரதிநிதிக்கிறது.

இவ்வேளையில், மலேசியத் தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்வதும் தெரிய வந்துள்ளது.

வாரத்திற்கு 30 மணி நேரங்களுக்கும் குறைவாக வேலை செய்வோரின் எண்ணிக்கை, முந்தையக் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாவது காலாண்டில் 2.8 விழுக்காடு சரிந்து 280,100 பேராகப் பதிவாகியுள்ளது.

அதே சமயம், வேலையில்லாத் திண்டாட்ட விகிதமும் 2021 செப்டம்பரிலிருந்து குறைந்து வருகிறது.

அப்போது 729,600 பேர் அல்லது 4.5 விழுக்காடாக இருந்த அவ்விகிதம், இவ்வாண்டு செப்டம்பரில் 555,300 பேர் அல்லது 3.2 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

நாட்டின் ஊக்கமளிக்கும் பொருளாதார செயல்திறனைத் தொடர்ந்து, இவ்வாண்டு செப்டம்பரில் நாட்டின் தொழிலாளர் சந்தை நிலை வலுவாக இருந்ததாக அத்துறை சுட்டிக் காட்டியது.

வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் குறைவாகப் பதிவாகியுள்ள மாநிலங்களாக கெடா, சிலாங்கூர், பினாங்கு, புத்ராஜெயா ஆகியவை உள்ளன.

அதிகமுள்ள மாநிலங்களாக சபா, லாபுவான் மற்றும் கிளந்தான் இருக்கின்றன .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!