
மூவார், செப்டம்பர்-18 – ஜோகூர் மூவாரில், 32 வயது வேலையில்லாத ஆடவன், தன் சொந்தத் தந்தையை கம்பு மற்றும் கத்தியால் தாக்கியப் பிறகு, வீட்டையே தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் நேற்று காலை 9.43 மணிக்கு கம்போங் தெங்கா, ஜாலான் பக்ரியில் (Bakri) நிகழ்ந்ததாக, மூவார் மாவட்ட போலீஸ் தலைவர், உதவி ஆணையர் ராய்ஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் (Raiz Mukhliz Azman Aziz) தெரிவித்தார்.
தீ விபத்தில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்துபோயின.
சேதம் சுமார் ஒரு லட்சம் முதல் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரிங்கிட் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த 70 வயது தந்தை தற்போது சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டதும் உறுதியானது.
அவ்வாடவனுக்கு மனநலப் பிரச்சனை இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.