மெர்சிங், செப்டம்பர் 23 – நேற்று, ஜோகூரின், நிதார் – மெர்சிங் (Nitar – Mersing) சாலையில், ஆசிரியர் ஒருவர் யானையை மோதி, அதிர்ஷ்டவசமாகக் காயங்களுடன் உயிர் தப்பினார்.
Endau-விலிருந்து, Kahang, குளுவாங்கை நோக்கிப் பயணித்த Honda City வாகனம், யானை மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வாகனத்தைத் தனியாக ஓட்டி வந்த 30 வயது ஆசிரியர், சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து, யானை செல்லும் வரை அந்த ஆசிரியர் வாகனத்திலேயே இருந்ததாக மெர்சிங் மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் ஷெரீப் ஷாய் ஷெரீப் மொண்டோய் (Sharif Shai Sharif Mondoi) கூறினார்.
விபத்துக்குள்ளான யானை அருகில் உள்ள செம்பனை தோட்டத்தை நோக்கிச் சென்றதால், அதன் உடல்நிலையை அடையாளம் காண முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.