
சிட்னி, டிச 2 – ஆஸ்திரேலியப் பகுதி பல ஆண்டுகளில் கண்ட மிகப்பெரிய தீ விபத்துகளில் ஒன்றான 150 மீட்டர் உயரத்திற்கு வானத்தில் தீப்பிழம்புகள் ஏற்பட்டன. சிட்னியின் மேற்கில் ஒரு பெரிய தீப்பந்தம் வெடித்து, கான்கிரீட் கட்டைகள் மற்றும் ஒரு ரசாயன தொட்டியை காற்றில் அனுப்பிய தருணத்தை புகைப்படங்கள் மூலம் காணமுடிந்தது. சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டபோது, 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சிட்னியின் மேற்கில் நார்த் செயிண்ட் மேரிஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
அருகாமையில் இருந்த கட்டிடங்களில் இருந்தும் வெடிப்புகள் ஏற்பட்டன. இந்த தீபத்தின்போது தீயணைப்பு வீரர்களில் இருவருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. மேற்கு சிட்னியில் பல ஆண்டுகளாகக் காணப்பட்ட “மிகப்பெரிய தீ விபத்துகளில் இதுவென தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் விவரித்துள்ளனர். தீயை அணைப்பதற்காக வான்வழி தளவாடங்களும் வரைவழைக்கப்பட்டன. அபாயகரமான ரசாயன பொருட்களை அகற்றும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைய குழுவினரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தனர். உள்ளூர்வாசிகள் விலகி இருக்கவும் ஜன்னல்கள், கதவுகள் மற்றும் காற்றோட்டக் குழாய்களை மூடவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.



