Latestஅமெரிக்காஉலகம்

மொஜ்தபா கமேனி ஓரினச் சேர்க்கையாளராம்; CIA கூறியதாக ட்ரம்ப் தகவல்

வாஷிங்டன், மார்ச்-27-ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறையான CIA, அதிபர் டோனல்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளதாம்.

56 வயதான மொஜ்தபா, தனது தந்தை ஆயதொலா அலி கமேனி அமெரிக்க-இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டப் பிறகு மார்ச் 8-ஆம் தேதி புதிய உச்சச் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் தனது சிறுவயது ஆசிரியருடன் நீண்டகால பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், குடும்பத்துடன் பணியாற்றிய ஒருவருடனும் தொடர்பில் இருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உள்ளபடியே ட்ரம்பை அதிர்ச்சியடையச் செய்த போதும், கேட்டதும் அவர் சத்தமாகச் சிரித்துவிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொஜ்தபா கமேனிக்கு ஆண்கள் மீது பாலியல் ஈர்ப்பு இருப்பதாகக் கூறப்படும் புகைப்பட ஆதாரங்கள் இல்லை. ஆனால், CIA அதிகாரிகள் இதை ‘நம்பகமான தகவல்’ எனக் கூறுகின்றனராம்.

ஈரானிய அரசாங்கம் வைத்திருக்கும் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆதாரங்கள் ஒன்றிலிருந்து அத்தகவல் பெறப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், இது ஈரான் மீதான போரைத் திசை திருப்ப அமெரிக்க உளவுத்துறை மேற்கொள்ளும் உளவியல் விளையாட்டு என சிலர் சாடுகின்றனர்.

ஈரானில், மரண தண்டனை விதிக்கப்படும் அளவுக்கு, ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமாகும்; இந்த நிலையில், அந்நாட்டின் உச்சத் தலைவர் மீதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!