Latestமலேசியா

யு.எஸ் .எம்மின் பொறியியல் இந்திய கலச்சாரா மன்றத்தின் ஏற்பாட்டில் அரங்கேற்றம்: கலச்சார சிம்போனி

கோலாலம்பூர், மே 26 – USM எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் இந்திய கலாச்சார மன்றம் “அரங்கெத்ரா: ஒரு கலாச்சார சிம்பொனி” நிகழ்ச்சியை USM, பொறியியல் வளாகத்தில் ஏற்பாடு செய்யவுள்ளது. மே 31 ஆம்தேதி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிவரை USM பொறியியல் வளாகத்தில் Dewan Utama மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் பாரம்பரிய நடனங்கள், இசைக்கருவிகள், கோலாட்டம், உறுமி மேளம், வீணை மற்றும் பல இசைக் கருவிகளைக் கொண்டு இந்திய கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் படைக்கப்படுகிறது.

, இந்திய கலாச்சாரங்கள் மற்றும் அதன் பல்வேறு பின்னணியைக் கொண்ட வளமான வரலாறை பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அது தொடர்பான படைப்புக்கள் நடைபெறும். Unique Arts அகாடமி, Thrischool Arts மற்றும் ஈஸ்வரி ஆர்ட்ஸைச் சேர்ந்த தொழில்முறை நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் அனைத்து வருமானங்களும் புற்றுநோய் நோயாளிகள், முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் உட்பட உன்னத நோக்கங்களை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்படும். மேல் விவரங்களுக்கு
” கலாச்சார சிம்பொனி” திட்ட இயக்குநர் சூரியன் மோகனதாஸ்
011-51911652 என்ற எண்களில் அல்லது eicc.usm.eng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!