
செலாயாங், மார்ச்-13-ரவாங், ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்று வந்த இடிப்பு பணிகளை உடனடியாக நிறுத்துமாறு, Yayasan Kubra அறக்கட்டளைக்கு செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நில உரிமை தொடர்பான விவகாரம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், கோவில் இடிப்பு நடவடிக்கைகள் பொது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என நீதிபதி Chai Guan Hock கூறினார்.
1995-ஆம் ஆண்டிலிருந்து அக்கோவில் இயங்கி வருகிறது; ஆனால், நிலம் 2021-ஆம் ஆண்டு புதிய உரிமையாளருக்கு கைமாறியது.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது ஜூன் 5-ஆம் தேதி முடிவுச் செய்யப்படும்.
அதுவரை, கோவில் ‘status quo’ அதாவது தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவிலை காலி செய்யுமாறு ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை, அமைதியைக் கெடுக்கும் வகையிலான எந்தவோர் இடிப்பு முயற்சிகளையும் தடுக்கக் கோரி, கோவில் நிர்வாகம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தது.
தன்னிச்சையாக கோவிலை உடைத்தன் பேரில் முன்னதாக பிப்ரவரி 11-ஆம் தேதி நால்வர் கைதாகி, விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.



