சென்னை, ஜனவரி-14, பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார்.
இரசிகர்களும் பொதுமக்களும் இனி தம்மை ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பெயர் தன் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லுமென, தான் வெளியிட்ட அறிக்கையில் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தனது இரசிகர் மன்றத்தை, பிறருக்கு உதவும் வகையில் ‘ரவி மோகன் இரசிகர்கள் அறக்கட்டளை’ என்றும் அவர் மாற்றியுள்ளார்.
அதோடு, ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற புதியத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதாகவும் ரவி அறிவித்தார்.
உலகளவில் இரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்குக் கொண்டுச் சேர்க்கும் நோக்கத்தோடு அப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தனது புதியப் படமான ‘காதலிக்க நேரமில்லை’ திரைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2003-ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரவி.
அப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதால், அன்றிலிருந்து அவர் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.