
ரொம்பின், ஜனவரி-3 – பஹாங், ரொம்பின், சுங்கை மொக் ஆற்றுப் பாலம் நேற்று காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தது.
இதனால், 11 முதல் 55 வயதுக்குட்பட்ட 7 பேர் அதில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் ஒரு நிறைமாத கர்ப்பிணி மற்றும் ஒரு சிறுமியும் அடங்குவர்.
குவாலா ரொம்பின் போலீஸ் நிலையத்திலிருந்து 3 அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
கர்ப்பிணி உள்ளிட்ட எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாலம் இடிந்து விழுந்ததால், 700-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினசரி பயன்படுத்தும் முக்கியச் சாலையை இது துண்டித்துள்ளது.
எனவே, பாலம் உடனடியாகப் பழுது பார்க்கப்பட வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



