
கோத்தா திங்கி, நவம்பர்-21 – ஜோகூர், கோத்தா திங்கி அருகே, லாரி தடம்புரண்டு பள்ளத்தில் விழுந்தது தீப்பற்றியதில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டார்.
நேற்று மாலை Jalan Lok Heng – Mawai சாலையின் 26-ஆவது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்தவர் Volvo இரக லாரி ஓட்டுநரான 38 வயது R. சசிதரன் என அடையாளம் கூறப்பட்டது.
அவரின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.
விபத்தில் வேறு எந்த வாகனமும் சம்பந்தப்படவில்லை என போலீஸ் உறுதிப்படுத்தியது.



