மெர்சிங், ஜன 9 – அண்மையில் லோரி ஓட்டுனர் ஒருவரை கொலை செய்ததாக ஆடவர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட Shakirin Mohammad என்பவரின் உடல் கடந்த மாதம் Mersing, Jalan Jemaluang-Kahang சாலையோரத்தில் காரின் பின்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
டிசம்பர் 28 ஆம் தேதி விடியற்காலை மணி 6.10க்கும் பிற்பகல் மணி 1.50 க்குமிடையே 28 வயதுடைய Shakirinனை கொலை செய்ததாக 36 வயதுடைய லோரி ஓட்டுனரான ஹஸ்புல்லா அடாம் (Hasbullah Adam) மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் Nurkhalida Farhana Abu Bakar முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக Hasbullah தலையசைத்தார்.
கொலைக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் Hasbullahவிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.