
ஈப்போ , ஜன 28 – லோரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெர்கர் அங்காடி கடை ஒன்று சாலையில் விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் Kamunting, Jalan Medan Saujana 3 இல் நிகழ்ந்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் மாலேக் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து dashcam மில் பதிவான காணொளி முகநூலில் நேற்று வைரலானது.
தைப்பிங்கிலிருந்து கமுண்டிங்கிற்கு பெர்கர் அங்காடி கடையை
30 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் Hino லோரியில் ஏற்றிச் சென்றபோது ஜனவரி 20 ஆம்தேதி மாலை மணி 3.30 அளவில் இச்சம்பவம் நடந்ததாக தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அந்த லோரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து லோரியில் இருந்த பெர்கர் அங்காடிக் கடை சாலையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் மோட்டார் சைக்கிளோட்டியையும் 34 வயது பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற புரோட்டோன் சாகா காரையும் மோதியது. இச்சம்பவத்தில் கார் ஓட்டுநர் காயம் எதுவுமின்றி தப்பினார். அதே வேளை காயத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். இந்த சம்பவம் குறித்து 1959ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



