Latestஉலகம்

வட சுமத்ராவில் வலுவான நில நடுக்கம்; மலேசியாவிலும் உணரப்பட்டது

கோலாலம்பூர், மார்ச்-18 – இந்தோனேசியா,  வட சுமத்ராவில் உள்ள Mandailing Natal எனுமிடத்தில் இன்று காலை வலுவான நில நடுக்கம் ஏற்பட்டது.

உள்ளுர் நேரப்படி காலை 6.23 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 5.6-ராக நில நடுக்கம் பதிவாகியது.

இந்தோனேசிய வானிலை, காலநிலை, புவி இயற்பியல் துறையான BMKG, X தளம் வாயிலாக அதனை உறுதிப்படுத்தியது.

நில நடுக்கத்தின் மையப்பகுதியின் ஆழம் 109 கிலோ மீட்டராகும்;

ஆனால் இதனால் சுனாமி அபாயம் எதுவுமில்லை என BMKG கூறியது.

அந்நில நடுக்கத்தின் அதிர்வு தீபகற்ப மலேசியாவில் கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல இடங்களிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!