வயது குறைந்த பெண் காருக்குள் கற்பழிப்பு; இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மூவார், டிசம்பர்-2, ஜோகூர், மூவாரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்ட ஓர் இளைஞன், வயது குறைந்த பெண்ணைக் காருக்குள் வைத்து கற்பழித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.
எனினும், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை 22 வயது Khairul Irsyad Khairuddin மறுத்து விசாரணைக் கோரினான்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி இரவு 9 மணிக்கு மூவாரிலுள்ள ஒரு வீட்டின் முன்புறம் அவன் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
நண்பர்களைத் தேடும் செயலி வாயிலாக இருவருக்கும் அறிமுகமான நிலையில், சம்பவத்தன்று 15 வயது அப்பெண்ணை காரில் ஏற்றி தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி அக்கொடூரத்தை அவன் புரிந்துள்ளான்.
நடந்ததை வீட்டில் பெற்றவர்களிடம் கூறினால், அப்பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வைரலாக்கி விடப் போவதாவும் அவன் மிரட்டியுள்ளான்.
அவ்வாடவனுக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி விட்டது தெரிய வந்ததால், உறவை முறித்துக் கொள்ளப்போவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்;
இதனால் அப்பெண்ணை அவன் மிரட்டியால் அவர் போலீசில் புகார் செய்ய, அவனின் குட்டு வெளிச்சத்துக்கு வந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 20 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.